Friday, February 19, 2016

குரூப் - 2 பணிக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளில், குரூப் - 2 பதவிக்கான, 2012 நவம்பரில் நடந்த தேர்வில் தேர்வானவர்களுக்கு, ஆறு கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டு, பணிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன
.
அடுத்தகட்ட கவுன்சிலிங், பிப்., 22ம் தேதி நடக்கும். இதற்கு தேர்வானோர் விவரங்கள், மற்றும் அழைப்பு கடிதங்களை, தேர்வாணைய இணையதளமான, www.tnpsc.gov.inல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment